தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை, குலத்தூர் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

A மனோஜ் குமார் மற்றும் C பிரவீன் குமார் என அடையாளம் காணப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல்க்ள தெரிவிக்கிறது.


READ | கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது தூத்துக்குடி...!


இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் திருநெல்வேலியில் உள்ள ஒரு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறார்களைத் தவிர கைது செய்யப்பட்ட 4 பேர் சரவண குமார் (27), M.வேலுச்சாமி (29), K.உதயகுமார் (19), V கருப்பசாமி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 147, 509, மற்றும் 506 (ii) பிரிவுகள், பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் பிரிவு 4, 5 (1), 6, 11 (2), 11 (4), போக்ஸோ சட்டத்தின் 11 (5), மற்றும் 17, மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67B-ன் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக தூத்துக்குடியின் புளியங்குளம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியன் வன்கொடுமைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்று தீக்குளித்தார். சுமார் 40 சதவீத தீக்காயங்களுடன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே அவரது உறவினர்களில் ஒருவர் வெளியிட்ட வீடியோவில்., சிறுமி சந்தேக நபர் ஒருவரால் அச்சுறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.


READ | பாரம்பரிய படகுகள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம்... -tnGovt


உள்ளூர் நபர்களின் தகவல்கள் படி சரவண குமார் என்னும் நபர் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் சுய உதவிக்குழுவில் பணிபுரிந்து வந்தார் எனவும், அவருடன் நட்பு கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. மேலும் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. ஒருகட்டத்தில் சிறுமி அவருடன் பேசுவதை நிறுத்திய பின்னர், சரவண குமார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது.