தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி பெண் குணமடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது!!
நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி பெண் குணமடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பசுவந்தனையை சேர்ந்தவர் பெண் குணமாகி உள்ளதை தொடர்ந்து அவர் இன்று வீடு திரும்பினார். இதனால், தூத்துக்குடி கொரோனா தொற்று இல்லா மாவட்டமாகியது. 57 வயது மதிக்கத்தக்க வயதான பெண் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த பெண் சிகிச்சை நிறைவடைந்து குணமாகி வீடு திரும்பினார்.
இவரை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவர்கள் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தார் இவர் இன்று வீடு திரும்பியதை தொடர்ந்து, தூத்துக்குடி கொரோனா தொற்று இல்லா மாவட்டமாகியது. தமிழகத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி கொரோனா இல்லாத மாவட்டம் ஆகும். கொரோனா வந்து முழு குணமடைந்து தற்போது யாரும் பாதிக்காததால் நீலகிரி, ஈரோடு ஆகியவை கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறின. இந்நிலையில் தூத்துக்குடியும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.