லாரியையும் முந்திரியையும் கடத்தியவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழக போலீஸ் Hats Off
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரியை, லாரியுடன் கடத்திய முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்ட 7 பேர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட போலீசார், புகாரளித்த 12 மணிநேரத்தில் கடத்தப்பட்ட லாரியை கண்டுபிடித்து கடத்தியவர்களையும் கைது செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் இருந்து 8 டன் எடை கொண்ட 1.10 கோடி மதிப்பிலான முந்திரி ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தது. அதற்காக, லோடு ஏற்றிய லாரி தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி சென்றுள்ளது.
ஹரி என்ற டிரைவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி லாரியை மடக்கி கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஓட்டுநர் ஹரி உடனடியாக முந்திரி ஆலையின் மேலாளர் ஹரிகரனிடம் தகவல் தெரிவித்தார்.
மேலாளர் உடனே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் (Police Station) புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் லாரியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, லாரியில் உள்ள GPS கருவியை நீக்கிவிட்டு லாரியை ஓட்டிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
ALSO READ | திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை
பின்னர் தூத்துக்குடியில் இருந்து லாரி நாமக்கல் நோக்கி செல்வதாக தனிப்படையினர் அறிந்துள்ளனர். லாரியை காவல்துறையினர் பின்தொடர்வதை தெரிந்துக் கொண்ட மர்ம கும்பல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டது.
தொடர்ந்து மர்ம கும்பலை தேடிவந்த போலீசார், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சாலையில் நின்ற கார் ஒன்று தொடர்பாக விசாரித்தனர். அப்போது கடத்தலில் ஈடுபட்ட
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங், உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது (arrested by police) செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார் மற்றும் கடத்தப்பட்ட லாரியை தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையிலான காவல்துறையினர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். புகாரளித்த 12 மணிநேரத்தில் கடத்தப்பட்ட லாரியை கண்டுபிடித்து கடத்தியவர்களையும் கைது செய்திருக்கிறது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
READ ALSO | போக்சோ சட்டம் சொல்வது என்ன? குழந்தை உரிமைகள் அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR