வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக-காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக-பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற மற்ற கட்சிகளும் தேர்தலை சந்திக்க களத்தில் இறங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து கட்சிகளும் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்தநிலையில், இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது அவர் எந்தவித அனுமதியும் பெறமால் திறந்த ஜீப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அதைப்பார்த்த தேர்தல் அதிகாரி ஷாஜி நிஷா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பாஜக வேட்பாளரான பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் போட்டியுடுகிறார். ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.