சென்னை சிக்னலில் இனி இளையராஜா பாட்டுக்கு நோ... புது கமிஷனர் போட்ட உத்தரவு - என்ன தெரியுமா?
Chennai Latest News: சென்னை போக்குவரத்து சிக்னல்களில் இதுவரை ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கப்பட்டு வந்த சினிமா பாடல்கள், செய்திகள், விழிப்புணர்வு வாசகங்கள் ஆகியவற்றை ஒலிப்பரப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Latest News: சென்னையில் சிக்னல்களில் காத்திருக்கும் போது, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பொறுமையாகவும் அமைதியாகவும் தங்களுக்கு பிடித்தமான இசை மற்றும் விழிப்புணர்வு செய்திகளை கேட்பதற்காக சென்னையில் 105 சாலை சந்திப்புகளில் 'மியூசிக் சிக்னல்' என்ற திட்டம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒலி பெருக்கி மூலம் இசை, 300-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்கள், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த செய்திகளை ஒலி பெருக்கி வாயிலாக தொடர்ந்து ஒலிக்க செய்யப்பட்டது.
அடுத்தடுத்த உத்தரவு
இந்த நிலையில் ஒலி மாசுபடுவதைப் தடுக்கவும் சிக்னல்களில் காத்திருக்கும் போது ஒலிக்கப்படும் பாடல்களை இனி ஒலிபரப்ப வேண்டாம் என புதிதாக சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மீண்டும் வாக்கு எண்ணிக்கை... திமுக கூட்டணிக்கு பின்னடைவா...?
ஏற்கனவே பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் உத்தரவாக ஒலி மாசு ஏற்படுவதை தடுக்கவும் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும் போக்குவரத்து போலீசார் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இனி இளையாராஜா இசை கிடையாது...
மேலும், சினிமா பாடல்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் அதிகமிருந்தன. சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தாலும், இளையராஜாவின் இசை தங்களை ஆற்றுப்படுத்துவதாக பல நெட்டிசன்கள் கூறி வந்தாலும், சென்னை காவல் ஆணையரின் இந்த நடவடிக்கை ஒலி மாசை குறைக்கும் முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற்ற நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலுக்கு டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் பொறுப்பு சந்தீப் ராய் ரத்தோருக்கு வழங்கப்பட்டது. இவர் தமிழக காவல் துறையின் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றி வந்தார்.
சென்னை மக்கள் கவனத்திற்கு...
முன்னதாக, சென்னை மெரினாவில் காந்தி சிலை பின்புறம் பயன்பாட்டில் இருந்த மெரினா சர்வீஸ் ரோடு மெட்ரோ பணிகள் காரணமாக அடுத்த ஒரு வருடத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை ட்விட்டரில்,"480 மீ., நீளம் மற்றும் 7 மீ., முழு அகலம் கொண்ட சென்னை கலங்கரை விளக்கம், மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு (காந்தி சிலைக்கு பின்புறம்) சென்னை மெட்ரோ வேலைகள் காரணமாக நாளை முதல் (ஜூலை 6) முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு பயன்பாட்டில் இருக்காது" என அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | அரசு மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்! ககன்தீப் சிங் அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ