சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்; மீறினால் உரிய நடவடிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், அணியாத போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 


இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்று முதலே தமிழகம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை விரட்டி விரட்டி பிடித்து அபாரதம் வசூலித்து வருகிறார்கள்.


இந்நிலையில், சமீபத்தில் இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று வெளியிட்ட உத்தரவில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து போலீசாரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாத போலீசார் மீது போக்குவரத்து போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.