சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்ய வாய்ப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுப்படி சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியும்.


சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.


சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.


கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.


இந்நிலையில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர். அந்த ரிசார்ட்டிற்குள் சென்ற அதிவிரைவுப்படை போலீசார் அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.