Tambaram Encounter: தாம்பரம் அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, தங்கள் மீது தாக்குதல் தொடுத்ததால் எதிர்த்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் செய்திகுறிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், தாம்பரம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள காரணை - புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று (ஆக. 1) அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


அப்போது, அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்டனர் என கூறப்படும் நிலையில், அந்த கார் நிற்காமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அந்த கார் அருகில் சென்ற போது, அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 



மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் - அண்ணாமலை


அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 



இதில் காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத் (35) த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்ததாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. 



மற்றொரு நபர் பெயர் ரமேஸ் (32) த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்ததாகவும் கூறப்படும். 


தொடர்ந்து, காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர் என போலீசார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | டாஸ்மாக்கில் 5 ரூபாய் வாங்கப்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ