மாட்டுக்கறி விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து, சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைச்சிக்கான கால்நடைகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு புதிய நிபந்தனைகளை மத்திய அரசு புகுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற ஐஐடி ஏரோஃபேஸ் மாணவர் மாட்டுக்கறி விருந்தை நடத்தினார்.


இந்நிலையில் நேற்று மாலை குறிப்பிட்ட அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கும் ஐஐடி மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் சூரஜ்ஜிற்கு வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. 


இதனிடையே சூரஜ் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 50-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் சென்னை ஐஐடி வளாகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் ஐஐடி பல்கலைகழக வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.


இதனால் போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஐஐடி வளாகத்திலிருந்து வெளியேற்றினர்.