Video: லிஃப்டில் சிக்கிய 7 பேர் - போராடி மீட்ட காவலர்கள்; குவியும் பாராட்டு!
சென்னையில் லிஃப்ட் ஒன்று பழுதான நிலையில், அதில் சிக்கிய 7 பேரையும் காவலர்கள் போராடி மீட்டனர்.
சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 2ஆவது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று இன்று மதியம் (அக். 10) சென்றுள்ளது.
அப்போது, அவர்கள் கட்டடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்தியபோது, திடீரென லிஃப்ட் பழுதானது. அதில், ஒரு சிறுவன், மூன்று பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். லிஃப்ட பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் விவகாரம் : அரசு எடுத்திருக்கும் முடிவு!
ஏறத்தாழ ஒருமணி நேரமாக லிஃப்டில் அவர்கள் சிக்கியிருந்த நிலையில், அந்த வளாகத்தில் இருந்து காவல் நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த காவலர் குகன் என்பவர் காவல் கட்டப்பாட்டு அறையை தொடர்புகொண்டு சம்பவம் குறித்து விவரித்துள்ளார். இதையடுத்து, பாண்டி பஜார் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து, காவலர் குகன் உள்பட மூன்று காவலர்கள் லிஃப்டின் கதவை கடப்பாரையை கொண்டு உடைத்தனர். தொடர்ந்து, போராடி கதவை உடைத்து உள்ளே மாட்டியிருந்த ஏழு பேரையும் மீட்டனர். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக லிஃப்டில் சிக்கித்தவித்த ஏழு பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சரியான சமயத்தில், சிறப்பாக செயல்பட்டு லிஃப்டில் மாட்டிய அனைவரையும் பத்திரமாக மீட்ட காவலர்களை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பாராட்டினர். தொடர்ந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் உள்பட காவலர்கள் பலரும் அவர்களின் சமயோஜித்த செயலுக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் படிக்க | பேருந்து நிழற்குடையில் +2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ