காவல்துறையில் காலியாக உள்ள  பணியிடங்களையும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக புதுச்சேரி காவல்துறை டிஜிபி-யை முதல்வர் அவர்கள் சந்தித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பினை அடுத்து இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "காவல்துறையில் காலியாக உள்ள  பணியிடங்களையும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கும்படி கூறினேன். பதவி உயர்வு அடிப்படையில் காலியாக உள்ள சுமார் 63 உதவி ஆய்வாளர் பதவிகளை, தேர்வு வைத்து, பிப்ரவரி முதல் வாரத்திற்குள் நிரப்புவதென முடிவெடுக்கப்பட்டது.


காலியாக உள்ள, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட வேண்டிய சுமார் 47 உதவி ஆய்வாளர் பதவிகளை நிரப்புதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு, அந்தப் பதவிகளையும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் நிரப்பவேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை டிஜிபி அவரிடம் கூறினேன்.



இது தொடர்பான விண்ணப்பங்களைக் கோருவதற்கான விளம்பரம் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும். அதுபோல, காலியாக உள்ள 390 போலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல்தகுதித் தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும்.


இதற்கான - ஒப்புதல்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளில் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதால் இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு காவல்துறைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.


மேலும், காவல்துறையில் கான்ஸ்டபிள் முதல் காவல்துறை கண்காணிப்பளார்வரை உள்ள அனைத்துப் பதவிகளின் பணி ஒழுங்குபடுத்துதல், பணிநிரந்தரம் செய்தல், போன்ற நிர்வாகப்பணிகளையும் முடிக்கும்படி காவல்துறைத் தலைவரிடம் கூறினேன். இதற்கான நடவடிக்கையை எடுப்பதாக காவல் துறை தலைவர் உத்திரவாதம் அளித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.