Corona Curfew: நள்ளிரவு ஊரடங்கு அமல் விதிமுறைகள் மீறல்! போலீசார் எச்சரிக்கை!!
நள்ளிரவு ஊரடங்கு அமல் விதிமுறைகளை மீறி சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கும் போலீசார்
தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது இதைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து சரியாக 10 மணி அளவில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையான பாலை ரோடு ஈரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வணிகர்கள் கடைகளை அடைத்தனர்.
சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. வாகன போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
Also Read | தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முழு விவரம்
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்ற வாகன தணிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது இர்வு நேர ஊரடங்கு (Night Curfew) விதிமுறைகளை மீறி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களை எஸ் பி ஜெயக்குமார் எச்சரித்து அனுப்பி வைத்தார்.
முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என எஸ் பி ஜெயக்குமார் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலர் உடனிருந்தனர்.
ALSO READ | கத்தியை காட்டி துணிகர கொள்ளை: 75 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்துடன் தப்பித்த கும்பல்
தமிழகத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரங்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
மாநிலத்திற்குள் தனியார் மற்றும் பொதுப்போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர், நடத்துனர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
மேலும், மாநிலத்துக்கு இடையேயான போக்குவரத்தில் முகக்கவசம் அணிதல், உடல் வெப்பநிலை பரிசோதனை, கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ALSO READ | கொழுந்தனை பிரிய மனம் இல்லாததால் அண்ணி தற்கொலை: ஏற்காட்டில் நடந்த விபரீதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR