குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம்
குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: காசிமேடு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் விமல்ராஜ் இவரது வீடு வியாசர்பாடியில் அமைந்துள்ளது இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் ஆட்டோவில் சென்று கீழ்ப்பாக்கம் பகுதியில் மது அருந்தியுள்ளார் அங்கு ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது அப்போது போலீசார் வந்துள்ளனர். அப்போது போலீசாரிடமும் விமல்ராஜ் மற்றும் அவரது நண்பர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆனால் அவரது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் தப்பி ஓடிய விமல்ராஜ், அவரது செல்போனை சம்பவ இடத்திலேயே விட்டு சென்றுள்ளார்.
அந்த செல்போன் மூலம் துப்பு துலக்கிய போலீசார், இவர் காசிமேட்டில் முதல் நிலை காவலராக இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வடசென்னை இணை ஆணையரிடம் சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் துரைகுமார் விமல்ராஜை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR