இருமொழி கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்று பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் முதலில் அதை தங்களது குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டும் என புதிய கல்வி கொள்கை குறித்து H ராஜா கருத்து...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபத்தில் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்வி கொள்கையின் மும்மொழி திட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்திருந்தார். தமிழகத்தில் இரு மொழி கொள்கையே அமலில் இருக்கும் எனறும் கூறியிருந்தார்.


இந்நிலையில், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து ஒன்றை வெளியிடுள்ளார். அது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.... " One should practice before preaching. இருமொழி கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்று பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் முதலில் அதை தங்களது குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை 3 மொழி பள்ளிகளில் சேர்த்துவிட்டு ஏழை தமிழன் குழந்தையை படிக்க விடமாட்டேன் என்பது ஏற்புடையதல்ல" என குறிப்பிட்டுள்ளார். 


ALSO READ | மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: EPS திட்டவட்டம்!



இதற்க்கு முன்னதாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்... "நமக்கு எதிரான கொள்கை கொண்டவர்களாயினும் அதில் உறுதியாக இருந்தால் நாம் மதிக்கலாம். தங்கள் குழந்தைகளை மும்மொழிப் பள்ளிகளில் படிக்கச் செய்து கொண்டு நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் என்பது ஏமாற்றுவேலை. இவர்கள் குழந்தைகள் பேரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் விவரம் சேகரிப்போம்" என அவர் கூறியிருந்தார். மேலும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படிப்பதை எதிர்ப்பது திராவிட விரோதம் என கூறியது குறிப்பிடதக்கது.