ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் குழுவில் மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒரு திட்டத்தை முன் வைக்கும் போது அதை ஆழமாக சிந்தித்து, பரிசீலனை செய்ய வேண்டும். அந்த திட்டத்தினால் கிடைக்கப்போகும் பயன்கள் என்ன, திட்டத்தினால் விளையப்போகும் தீங்கு என்ன என்பதை சீர்தூக்கு பார்க்க வேண்டும்.
அவரவர்களும் திட்டம் குறித்து சொந்தமான பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக திட்டத்தை எதிர்க்க கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இதுவரை விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதற்குள் மக்கள் போராட்டம், உண்ணாவிரதம் என எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டனர்.
இப்படி பேசுவதால் நான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.