தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழத்தில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேப்போன்று, புதுவையிலும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், இதன் பேரில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13-ஆம் தேதி திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


திங்கட்கிழமை விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை அடுத்து புதுவையிலும் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


முன்னதாக, தமிழகத்தில் ஜனவரி 11 முதல் இம்மாதம் 19-ம் தேதி வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். 


இதுதவிர, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதே போல் ஜனவரி 13-ம் தேதியைத் தவிர மற்ற நாட்களில் நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே பொங்கல் பண்டிகை விடுமுறைகளை முன்னிட்டு வரும் ஜனவரி 15., முதல் 17 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வங்கிகளும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.