அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக: தமிழக அரசு!
சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொங்கல் போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொங்கல் போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆண்டு தோறும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.
இது தொடர்பான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.