புதுடெல்லி: கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து விடுமுறை ரத்து அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். 


பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 


தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். 


இவ்வாறு  பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,  பொங்கல் பண்டிகை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. 


மேலும் தசரா பண்டிகைக்கு பதிலாக கட்டாய விடுமுறைப்பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.