பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்
பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்காக அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா (Coronavirus) ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போது, பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இது 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
ALSO READ | ரஜினியுடன் மோதும் தல அஜித்... கோலிவுட்டின் அனல் பறக்கும் செய்தி...
அந்தவகையில் அரசு விரைவுப்பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் இன்று முதல் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை (Pongal) முன்னிட்டு இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என தமிழக போக்குவரத்துத்துறை (Department of Transport) அறிவித்துள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி ஏதுவாக செல்லக்கூடிய நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது.
ALSO READ | தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம்: அரசு கூறுவது என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR