பொங்கல் பண்டிகையைப் புகை இல்லாத பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கல் பண்டிகை வரவுள்ளதை யொட்டி மக்கள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது சூரிய வழிபாடு, மஞ்சு விரட்டு என அனைத்து கிராமங்களிலும் ஆரவாரமாக இருக்கும்.


தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


பொங்கலுக்கு முன் தினம், " பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற நோக்கோடு போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. போகிப் பண்டிகையில் கொளுத்துவது நன்மை என்றாலுமே, மக்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களைக் கொளுத்துவதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. 


இந்நிலையில், பொங்கல் பண்டிகையைப் புகை இல்லாத பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் போகியின் போது பழைய குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழல் மாசுபாடு விளைவிக்கும் பொருட்கள் எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.