பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாதம் 11-ம், 12-ம், 13-ம் தேதிகளில வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லக் கூடிய பஸ்களுடன், 4,445 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 5 இடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம், 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.


இதற்காக, கணினி மூலம் உடனடி முன் பதிவு செய்யும் வகையில் மொத்தம் 29 சிறப்பு முன் பதிவு கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முன் பதிவு கவுன்டர்கள் இன்று முதல் 13-ம் தேதி வரை செயல்படும். முன்பதிவு கவுண்டர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.