தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.


ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கள் பரிவு வழங்கும் திட்டதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பின்படி பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில்., ஒருகிலோ பச்சரிசி, ஒரு‌ கிலோ சர்க்கரை, இரண்டு அடி‌ நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. 


முன்னதாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த சனி அன்று  தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.


இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடைகளில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு திட்டத்திற்காக 258 கோடி ரூபாயும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுக்காக சுமார் 1980 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


மக்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்கைள பொங்களுக்கு முன்னதாக வழங்கி விட வேண்டுமாய் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் சிறப்பு பரிசை ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியும் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.