ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.


போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


தற்காலிக ஓட்டுநர்களால் கடந்த சில நாட்களாக பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 70 சதவீதம் பேருந்துகள் கோவையில் 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.


இன்று காலை நிலவரப்படி கன்னியாகுமரில் 865 பேருந்துகளில் 269 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர்-80%, கன்னியாகுமரியில் 60%, புதுக்கோட்டை - 55% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


இந்நிலையில், பொதுமக்களின் தேவையை குறைப்பதற்காக சென்னையில் இன்று கூடுதலாக 30 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடங்க இருந்த சிறப்பு பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு மையத்தின் தொடக்க விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மேலும் வரும் 11,12,13 தேதிகளில் 11,983 சிறப்பு பெருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


பொங்கல் சிறப்பு பேருந்துகள் கூட்ட நெரிசலை சமாளிக்க உதவும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த முறை பொங்கலுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதே சிக்கலாகி உள்ளது.


பொங்கலுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதே சிக்கலாகி உள்ள நிலையில், நாளை வெள்ளிக்கிழமையுடன் பொங்கல் விடுமுறைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>