பொங்கல் சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும். அதற்கான முன்பதிவும் இன்று முதல் தொடங்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாவதால் சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.


பொங்கல் கொண்டாட மக்கள் தற்போதே தயாராகி விட்டார்கள். பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இதனால் இப்போதே மக்கள் தங்களது சொந்த வீட்டிற்கு சென்று கொண்டு உள்ளனர். 


தற்போது சென்னையில் கடும் மக்கள் நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 


இன்று திறக்கப்பட்டு இருப்பதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனேவே காலதாமதம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதாரண பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.


ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த ஜன.4-ஆம் தேதி முதல்  ஜன.11-ஆம் தேதி இரவு வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதை தொடர்ந்து போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டதால் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக ஜன.11, 12, 13 தேதிகளில் 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11, 958 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதில் நாள்தோறும் வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட ஜன.11-ஆம் தேதி 796, 12-ஆம் தேதி 1,980, 13-ஆம் தேதி 2,382 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


எனினும் ஏற்கெனவே அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 75-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.


ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள 75-ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் வழக்கத்துக்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆன்-லைன் முன்பதிவு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


எனினும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற தகவலை வெளியிட்டது