Pongal: ரயில் டிக்கெட் புக் பண்ண வேண்டாம்..! ஹேப்பியா ஊருக்கு போய்டு சென்னை வாங்க.!
பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த சிறப்பு ரயில்கள் மறுமார்க்கமாக தாம்பரம் வந்தடையும்.
பொங்கல் விழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்வே துறை சிறப்பு ரயில் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான தாம்பரம் முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
தாம்பரம் - தூத்துக்குடி ரயில்
தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் எண் 06001. இந்த ரயில் ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு தூத்துக்குடியில் சேரும். தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 06002 என்ற சிறப்பு ரயில் ஜனவரி 15 மற்றும் 17ம் தேதிகளில் இயக்கப்பட்டு, தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் 22 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும். செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், சங்கரன்கோவில், சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
மேலும் படிக்க | மகர சங்கராந்தி முதல் பட்டையை கிளப்பப் போகும் 3 ராசிகள்! அதிர்ஷ்டக்காற்று வீசும்
தாம்பரம் - திருநெல்வேலி ரயில்
தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் எண் 06003. இந்த ரயில் ஜனவரி 11, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியில் சேரும். திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு 06004 என்ற சிறப்பு ரயில் ஜனவரி 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் AC 3-tier, AC 3-tier economy, sleeper, general second class, differently-abled friendly second class மற்றும் luggage-cum-brake van பெட்டிகளுடன் இயக்கப்படும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
மேலும் படிக்க | நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ