புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தில் பொங்கல்விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதில் பீர் குடிக்கும் போட்டியும் இடம்பெற்றுள்ளது. 10 பீர் குடித்தால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பொங்கல் விழாவில் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவும் வகையிலான விளையாட்டு போட்டிகளை வைக்காமல், மது பழக்கத்தை ஊக்குவிக்கும் இப்போட்டிகள் நடத்தப்பட்டால் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பொங்கலுக்கு ரூ.238.92 கோடி ரூபாய் போதுமா? மக்களுக்கு பொங்கல் பரிசு அதிகரிக்குமா?


தமிழ்நாட்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகையுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் வெகு சிறப்பாக இந்த பண்டிகையை கொண்டாட இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த விழாவில் இடம்பெறும். கபடி, கயிறு இழுத்தல், பாட்டில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் சில புதுமையான விளையாட்டுகளும் இடம்பெறும். ஊர் மக்கள் மற்றும் உறவினர்களை மகிழ்விக்கும் விதமாக இத்தகைய போட்டிகள் எல்லாம் நடத்தப்படுவது வழக்கம். 


ஆனால் புதுமையான விளையாட்டு என்ற பெயரில் உடலுக்கும், சமூகத்துக்கும் சீரழிவை ஏற்படுத்தும் விளையாட்டு போட்டிகளிலும் பல இடங்களில் நடத்தபடுகிறது. இத்தனை நாட்கள் அவையெல்லாம் வெளியில் தெரியாமல் அல்லது பொதுசமூகத்தின் கவனத்துக்கு வராமல் எங்கோ ஒரு மூலையில் இப்படியான விளையாட்டி போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்போது போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு சென்றிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 



இந்த பீர் குடிக்கும் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இருக்கும் வாணக்கன்காடு கிராமத்தில் நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டரில், போட்டியின் பெயர் "பீர் குடிக்கும் போட்டி". இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள், 10 பீர் குடித்தால் முதல் பரிசு ரூ.5,024, 9½ பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024, 9 பீர் குடித்தால் மூன்றாம் பரிசு ரூ.3,024, 8 பீர் குடித்தால் நான்காம் பரிசு ரூ.2,024 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போட்டியின் நிபந்தனைகள் என்னவென்றால், வாந்தி எடுத்தலோ அல்லது உமட்டினாலோ போட்டியில் இருந்து விலக வேண்டும். மேலும் குடித்த பீருக்கான பணத்தை கொடுத்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்த போஸ்டருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது அப்பகுதியை சேர்ந்த காவல்துறையினர் கவனத்துக்கும் சென்றது. உடனடியாக போட்டி ஏற்பாடு குறித்து போஸ்டர் அடித்து ஒட்டியவர்களை அழைத்து காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | திமுகவின் கு.க.செல்வம் மறைவு..! 2 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ