தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் எங்கும் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் (Ration Card Holders) கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) வழங்கும் வழக்கம் இந்த ஆண்டும் தொடர்கிறது. கடந்த ஆண்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
விலைவாசி ஏற்றத்தால் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான அடக்கவிலை உயர்ந்து, கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்காமல், அரிசி, சர்க்கரை, வெல்லம், கரும்பு மட்டும் வழங்கலாம் என்றும் ஊகங்கள் உலா வந்தன.
ஆனால், இன்னும் நான்கே மாதத்தில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பொங்கல் தொகுப்பில் பணம் இல்லாமல் இருந்தால், செல்வாக்கு சரிந்துவிடும் என்பதால், நிதிச்சுமையையும் தாண்டி, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசில் பணத்தையும் கொடுக்கிறது. ஆனால், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால், பரிசுத் தொகையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.
மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!
இது குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் ரூ.1,000 ரொக்கத்தையும் அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்ற நிலையில், இதற்கான செலவு, ரூ.238.92 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தமிழகத்தில் வசிக்கும் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு வெற்றி... பொங்கல் தொகுப்பில் வருகிறது கரும்பு - முதல்வர் அறிவிப்பு!
பொங்கலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், மாதாந்திர ரூ.1,000 பண உதவி வழங்கப்படுகிறது. இந்த பணமும் பொங்கலுக்கு முன்பாகவே மகளிரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார். அடுத்தவாரம் இந்த திட்டம் தொடங்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன, ஏனென்றால், பொங்கல் கொண்டாட்டங்கள், ஜல்லிக்கட்டு போட்டியுடன் இன்னும் இரண்டே நாட்களில் தொடங்க இருக்கிறது.
மேலும் படிக்க | 100 பில்லியனைத் தாண்டிய UPI பரிவர்த்தனைகள்! டாப் கியரில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ