திருவள்ளூர் மாவட்டம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பிரியா - லட்சுமணன் ஜோடிக்கு திருமணமாகி பல வருடங்களாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கணவனை விட்டு பிரிந்து பிரியா வாழ்ந்து வருகிறார். இவருக்கும் பாலாஜி நகர் தெருவை சார்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ணன் தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந் நிலையில் பிரியாவுக்கும் அவரது ரகசிய காதலன் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளும் திருமுறை திருவிழா!


இதனால் கோபாலகிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் இருந்த பிரியா பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று மோசமாக பேசியுள்ளார். அதோடு அங்கிருந்த அவரின் தாயிடம், உன் மகனும் நீயும் இன்னும் ஒரு மணி நேரத்தில் இருக்கமாட்டீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து பிரியா சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தாய் நடந்ததை கூறியுள்ளார். இதனால் பிரியா மீது கடும் கோபமுற்ற கோபாலகிருஷ்ணன், புளியந்தோப்பு பகுதிக்கு சென்று பிரியாவை சந்தித்து அவரை வசைபாடியுள்ளார். அப்போது பிரியாவின் கூட்டாளிள் 4 பேர் அங்கு இருந்துள்ளனர். அவர்களிடம்ம் ’இவனை வெட்டுங்கள்’ என பிரியா கூறியதாக தெரிகிறது. உடனே அவர்கள் சினிமா பாணியில் புளியந்தோப்பு பகுதியில் ஓட ஓட விரட்டி கோபாலகிருஷ்ணனை வெட்டிவீசிவிட்டு தப்பியுள்ளனர்.  


இந்த சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன் பின்பு பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் பிரியாவையும், அவரது கூட்டாளிகளில் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச்சென்ற இரண்டு நபர்களை பொன்னேரி ஆய்வாளர் வடிவேல், டிஎஸ்பி கிரியாசக்தி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


இதற்கு நடுவே பிரியா கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று மிரட்டியதை நேரில் பார்த்த உறவினர், என்ன நடந்தது என்பதை விவரித்தார்.  பிரியாவுக்கு தனது தாயிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை கோபாலகிருஷ்ணன் கடனாக வாங்கிக்கொடுத்துள்ளாராம். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது தான் தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்ய அவரது தாய் முடிவெடுத்துள்ளார். இதனால் என்னை விட்டு சென்று நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்க்கிறேன் என சவடால் விட்ட பிரியா, கூட்டாளிகளை ஏவி அவரை கொலையே செய்துள்ளார். தகாத உறவு இப்படி இளைஞரின் உயிரையே பறித்துள்ளது.


மேலும் படிக்க | பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு... இனி விஜயகாந்துக்கு தேமுதிகவில் என்ன பொறுப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ