ஐஸ்வர்யா ராய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட வித்தியாசமான போஸ்டர்! இணையத்தில் வைரல்!
அவங்கள முடிச்சிறு !!! பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கை ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா மதுரையில் பொன்னியில் செல்வன் -2 படத்திற்காக வித்தியாசமான முறையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் ,ஜெயம் ரவி ,கார்த்தி மற்றும் நடிகைகள் திரிஷா , ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் வெளியாகி உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மிகப்பெரிய அளவில் வசூல் பெரும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் மதுரை மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பகை மாறா பாண்டியரின் வாரிசுகள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா! பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே, கடைசி ஆயுதமே என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!
உலகின் முதல் பெண் பாண்டிய அரசியான மீனாட்சி அம்மனோட அருளாசியோட நம்மலயே சீண்டி பாத்த சோழர்கள் இனிமேல் நம்மபக்கம் தலை வச்சு கூட படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சுறு.. என்றும் பாண்டிய வாரிசாகவே பிறக்க விரும்பும் என குறிப்பிட்டு பகை மறவாபாண்டியரின் வாரிசுகள் என்று அச்சிடப்பட்டு மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் -1 வெளியான போதும் இதே போன்று வித்தியாசமான வசனத்துடன் பகைமறவா பாண்டியன் வாரிசுகள் என்ற பெயரில் நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் பாகத்தை விட இது நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து உள்ளது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் திரையரங்கில் வெளியான படமும் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மேலும் பொன்னியின் செல்வன் புத்தக ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் மணிரத்னம் படத்தில் பல காட்சிகளை மாற்றி அமைத்துள்ளார். புத்தகத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெற வில்லை. இதனால் புத்தக ரசிகர்கள் மணிரத்னம் மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், படமாக எடுத்தால் இப்படி தான் எடுக்க முடியும் என்றும் மணிரத்னமிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ