தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை BJP அமைக்கும்: பொன்.ராதா
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....
கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்று, அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மேத்யூஸ் ஆவணப்பட வீடியோ நாடு முழுவதும் பெரும் புயலைக்கிளப்பி உள்ளது. மேலும் இச்சம்பவம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. எதிர்கட்சி உட்பட தமிழகத்தின் மற்ற கட்சிகள், இச்சம்பவம் குறித்து விசாரணை கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொடநாடு குறித்த கேள்விக்கு பத்தி கூறிய அவர்; எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்?. தேர்தல் வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள்; மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் குற்றஞ்ச்சாட்டுபவர்கள் ஆதாரங்களை வைத்துக்கொண்டு குற்றஞ்சாட்ட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மலும் அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணி தான் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைபற்றும். ரூ.2000 கோடி அல்ல, ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் நான் அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.