திருப்பூர் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.  ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்பட நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார் சூர்யா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சூர்யா, கோவை விமான நிலையத்திற்கு வந்தார் அங்கே அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16ம் தேதி வந்தடைந்தார். சிங்கப்பூரில் இருந்து இவர் வந்ததால் பீதி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். 


விரைந்து வந்த போலீசார் இவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் தனக்கு கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே தன்னை அனுப்பி வைத்தனர். என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆம்புலன்சில் ஏற மாட்டேன் இருசக்கர வாகனத்திலேயே வருவதாக தெரிவித்தார்.


 


READ | தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று..!


 


முகாமில் ஏசி வசதி இல்லாததால் என்னால் அங்கெல்லாம் தங்க முடியாது. நான் சிங்கப்பூரில் ஏசி அறையிலேயே தங்கி பழகிவிட்டேன். எனக்கு தனி அறை ஒதுக்கினால் நான் கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்ததால் அரசு மருத்துவமனையில் கொரோனா மாதிரி சேகரிப்பு பணி செய்யமுடியாமல் போனது. மீண்டும் இரவு திருப்பூர் ரயில் நிலையம் அழைத்து சென்ற சுகாதார துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இவரின் வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 


இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சி வெளியிட்டது. அதை கண்டு ஆத்திரமடைந்த அவர், அந்த செய்தி சேனலையும், செய்தியாளரையும் ஆபாசமாக திட்டி, மற்றொரு வீடியோ வெளியிட்டார். அந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அவதூறு பரப்பும் விதமாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 


இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரை கொரோனா  சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.