புயலுக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்...
![புயலுக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்... புயலுக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்...](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2019/04/25/143234-rain.jpg?itok=SEJFvg7t)
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்!
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்!
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை அல்லது நாளை மறுநாள் புயலாக வலுபெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே நாளை முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், 28-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது மழை வந்து செல்கிறது. கோடை வெப்பத்தை தனிக்கும் விதமாக அவ்வப்போது வந்த செல்லும் கோடை மழை மக்களின் மனதையும் குளிர்வித்துள்ளது. இந்நிலையில் தற்போது புயலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஏற்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.