காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு..!
20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில், தற்போது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுயர்த்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; குமரிக்கடலில் தற்போது உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிறகு புயலாக மாறவும் வாய்ப்புள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் நாளை வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.