கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் தெரியவரும் என  மாநகர காவல் துணை ஆணையர் உமா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை சரவணம்பட்டியை அடுத்த யமுனா நகர் பகுதியில் புதரில் சாக்கு மூட்டையில் கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளும் துப்புரவு பணியாளர் குப்பைகளை அள்ளி கொண்டிருக்கும்போது, அங்கு உள்ள புதரில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து கடும் துர்நாற்றம் வருவதை அறிந்து, மூட்டையின் அருகில் சென்று பார்த்தார். அப்போது, சாக்கு மூட்டையில் ஒரு மனித உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்குள்ள பொதுமக்களிடம் அதைப் பற்றி கூறியுள்ளனர்.


இதையடுத்து, உடனே சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விரைந்து வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


போலீசார் (TN Police) விசாரணையில் சிவானந்தபுரம் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின், 15 வயது மகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், சாக்கு மூட்டையில் இருந்த உடல் அவர்களது காணாமல் போன மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.


ALSO READ | கள்ளக்காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட பெண்! 


இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் துணை ஆணையர் உமா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சிறுமி கொலை தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமி வசிக்கக்கூடிய சிவானந்தபுரம் பகுதியிலேயே ஒரு மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிற்கும் உடல் இருந்த பகுதிக்கும் 150 மீட்டர் தூரம் மட்டுமே இருந்தது. தற்போது உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.' என்று கூறினார்.


'இந்த வழக்கில் இதுவரை கிடைத்துள்ள தகவலின் படி, அந்த சிறுமியின் குடும்ப நண்பராக இருந்த முத்துக்குமார் என்பவரால் அவர் கொலை (Murder) செய்யப்பட்டு, மூட்டையில் கட்டி வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. முத்துக்குமாரை தற்போது கைது செய்துள்ளோம். முத்துக்குமார் அந்த பெண்ணை கொலை செய்ததற்கு முக்கிய காரணம், அவருக்கும் கலைவாணிக்கும் தங்கநகை கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை. 4.25 கிராம் தங்கத்தை திருப்பிக் கொடுக்காத காரணத்தினால் இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முத்துக்குமாரை நாங்கள் கைது செய்துள்ளோம். தற்போது, புலன் விசாரணை நடந்து வருகிறது' என்று அவர் மேலும் தெரிவித்தார். 


வன்கொடுமை குறித்த கேள்விக்கு, அரசு மருத்துவமனை பிரேதப் ப‌ரிசோதனை‌ அறிக்கை முடிவுகள் வந்த பின்புதான் தெரிய வரும் எனவும் வழக்கு ஆதாயக் கொலை என்ற பிரிவில் மட்டும்தான் போடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 


' இந்த கொலை தொடர்பான விசாரணையில் பல்வேறு செல்போன்களை ஆய்வு செய்து முத்துக்குமாரை கைது செய்துள்ளோம். போக்சோ சட்டம் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். குழந்தைகள் வழக்கு அனைத்தும் அனைத்து மகளிர் காவல் நிலையம் கிழக்கில் பதிவு செய்யப்படுகின்றன' என்றார் மாநகர காவல் துணை ஆணையர் உமா.


ALSO READ | 6 மாத பெண் குழந்தை உயிரிழப்பு - காவல்துறை விசாரணை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR