மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) வரும் 22 ஆம் தேதி தொடங்க இருந்த விண்ணப்பபதிவு ஒத்திவைப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக விரும்புபவர்களுக்கு, CBSE நடத்தும் CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதினால் மட்டுமே பணியிடங்கள் ஒதுக்கப்படும். 


இந்நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) வரும் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை ஒத்திவைத்துள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 


நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பப்பதிவு ஒத்திவைக்கப்படுள்ளதாகவும், தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.