விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள் துவாரகா மாவீரர் நாளையொட்டி உரையாற்றுவார் என கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. எதிர்பார்த்தபடியே அவர் பேசுவது போன்ற வீடியோ யூடியூப்பில் தமிழ் ஒளி என்ற யூடியூப் பக்கத்தில் வெளியானது. அதில் துவாரகா பேசும்போது, " தமிழீழ என்ற உன்னத லட்சியத்திற்காக இன்னுயிரை ஈந்த மாவீரர்களை போற்றும் நாளில், ஆபத்து, துரோகம் நெருக்கடிகளை கடந்து உங்கள் முன்னே தோன்றியுள்ளேன். என்றாவது ஒருநாள் இலங்கை திரும்பி மக்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023: பட்டத்தை வென்ற வீரர்-வீராங்கனை யார் தெரியுமா?


இலங்கை தோல்வியுறும்போதெல்லாம் சக்தி வாய்ந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றதுடன், அவை  இலங்கைக்கு உதவின. புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தன.  சுதந்திரத்துக்கான போராட்டம் முற்றுப் பெறவில்லை. புறநிலைச் சூழல்கள் அனைத்தும் அப்படியேதான் இருக்கின்றன. பண்பாட்டுச் சீரழிவுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. சகலமும் சிங்களமயமாக்கப்படுகின்றன. அனைத்து சுதந்திரங்களும் பறிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.


எம் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள். எமது பிரச்னையில் தலையிட்ட சக்திவாய்ந்த நாடுகள் அரசியல் தீர்வை வழங்கவில்லை. ஐ.நா. போன்ற அமைப்புகளும் நீதியைப் பெற்றுத் தரவில்லை. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு இதுவே காரணங்கள். சுதந்திரத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்து வருகிறது. நாம் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்." என தெரிவித்துள்ளார்.  


அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தன் ஆகியோர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறினர். இந்த சூழலில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இது இலங்கையிலும், தமிழ்நாட்டு மக்களிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியாக என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ