பிராங்க் ஷோக்கு இனி தடை: மதுரைக்கிளை உத்தரவு!
பிராங்க் ஷோ எடுக்கவும், வெளியிடவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
பிராங்க் ஷோ எடுக்கவும், வெளியிடவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
டிக் டாக் செயலியை தடைசெய்யகோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தொடுத்த வழக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், டிக்-டாக் செயலியை தடைவிதிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும் பிராங்க் ஷோ போன்றவற்றால் தனித்தமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற ஷோக்களில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தாடைவிதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.