தமிழகத்தின் 5 வானொலி நிலையங்கள் ரிலே நிலையங்களாக மாற்றம்; பிரசார் பாரதி அறிவிப்பு
அகில இந்திய வானொலி, பிரசார் பாரதியின் கீழ், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் ஏழு முதன்மை சேனல்களைக் கொண்டுள்ளது.
தமிழகத்தில், நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் 5 முதன்மை வானொலி நிலையங்களான மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, புதுவை ஆகிய பகுதிகளில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களை சொந்த நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக மாற்ற பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது.
சென்னை முதன்மை சேனலாக இருக்கும். மற்ற அனைத்து வ்வானொலி நிலையங்களும் ரிலே ஸ்டேஷன்களாக சென்னை நிலையம் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும். இதனால் மற்ற முதன்மை சேனல்களில் உள்ள நூற்றுக்கணக்கான தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்று திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தின் பணியாளர் ஒருவர் கூறினார்.
ALSO READ | சூரிய நமஸ்காரத்தை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி
அகில இந்திய வானொலி, பிரசார் பாரதியின் கீழ், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் ஏழு முதன்மை சேனல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு முதன்மை நிலையமும் உள்ளூர் கலாச்சாரம், விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் உள்ளூர் தேவைகளை கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் 12 மணிநேரத்திற்கான சொந்த நிகழ்ச்சிகளைக் தயாரித்து வழங்கி வருகிறது.
இருப்பினும், சமீபத்தில், ஒரு மாநிலத்திற்கு ஒரு முதன்மை சேனலை வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை ரிலே சேனல்களாக மாற்ற மத்திய அரசு (Central Government) முடிவு செய்தது. தொழில்நுட்ப அடிப்படையில், இது 'ஒரு மாநிலம் ஒரு முதன்மை சேனல்' திட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதுமே இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் திட்டம் கைவிடப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், இத்திட்டத்தை பொங்கல் முதல் அமல்படுத்த தற்போது பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது.
ALSO READ | கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!
ரிலே சேனல்களுக்கு வாரத்திற்கு 5 மணிநேரம் மட்டுமே சொந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு வழங்கப்படும் என்ற நிலையில், உள்ளூர் ரேடியோ சேனல்களால் பெரும் பயனடைந்து வரும் மீனவர்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே பிரசார் பாரதி திட்டத்தை கைவிட வேண்டும் என பரவலாக கருத்து முன் வைக்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR