மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு -பொதுமக்கள் போராட்டம்
Dharmapuri News: கர்ப்பிணி உயிரிழந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலையில் அமர்ந்து ஆர்பாட்டம்.
Dharmapuri News: பென்னாகரம் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையை கண்டித்து உறவினர்கள் சாலையில் மறியல் செய்து ஆர்பாட்டம் செய்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரகாஷ், பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (21), நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த மாதம் 19 ஆம் தேதி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் நிலையில், ஏரியூர், பென்னாகரம், தர்மபுரி என மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப் பட்டதன் காரணமாக சிகிச்சைக்கு தாமதமானதால் பரமேஸ்வரி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழந்ததாக இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு மருத்துவ நிர்வாகம் விசாரணை செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததனர்.
மேலும் படிக்க: மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய கணவன்... துடிதுடித்த மனைவி!
ஆனால் கர்ப்பிணி உயிரிழந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இறந்த கர்ப்பிணியின் உறவினர்கள் ஏரியூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டும் சாலையில் அமர்ந்து மறியலில் செய்தும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. பின்னர் அங்கு வந்த பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் படிக்க: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற கொடூரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ