திருச்செந்தூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்தார். நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு அனுமதிக்காமல் அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்த பெண்ணிற்கு இன்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும்


திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உமரிக்காடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் துர்கா என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வந்த நிலையில், அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அந்த கர்ப்பிணி பெண் துர்காவை திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஸ்கேன் எடுத்து வருமாறு பிரசவ வலியிலும் அலைகளித்துள்ளனர்.


மேலும், உடனே இன்னும் ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறிய செவலியர்கள், ஆனால் அலட்சியத்துடன் நடந்துக் கொண்டதுடன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறியுள்ளனர். இக்கட்டான அந்த பிரசவ வலியிலும் 108 ஆம்புலன்ஸ் உதவியும் கிடைக்காத நிலையில் கர்ப்பிணி பெண் துர்கா அலைகழிக்கப்பட்டுள்ளார்.


கர்ப்பிணியை, அவரது தாயார் வள்ளி, நடக்க வைத்தே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார். 21 வயதான கர்ப்பிணி பெண் துர்காவுக்கு இன்று பிற்பகல் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இந்த கர்ப்பிணி பெண்ணிற்கு நடந்த சம்பவம் குறித்து பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணின் தாயாரிடம் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் பொன் இசக்கி இது குறித்து கேட்டறிந்தார். மேலும் இன்று கர்ப்பிணி பெண் துர்காவிற்கு பிறந்த ஆண் குழந்தையை பார்த்த அவர்,  தாய் - சேய் உடல் நலன் குறித்து மருத்துவர் நித்தியாவிடம் கேட்டறிந்தார்.


மேலும் படிக்க | காய்கறி கடையில் காசு கேட்டு கலாட்டா செய்த காங்கிரஸார்... மூவர் சஸ்பெண்ட் - பாத யாத்திரை பரிதாபங்கள் 


அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் மருத்துவமனையில் துர்கா என்கிற கர்ப்பிணி பெண்ணிற்கு நடந்த சம்பம் குறித்து மருத்துவ வல்லுனர்கள் குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் இதுபோன்று பிரசவ வலியினால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் நடைபெறும் சம்பவம் குறித்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கூறினார்.


இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தவறு மற்றும் குறைபாடுகள் எதுவும் இருந்தால் நிச்சயம் அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.


மேலும் படிக்க | PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ