தேமுதிக (DMDK) பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்தின் (Premalatha Vijayakanth) கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் திங்கள்கிழமை நேர்மறையாக வந்தன. இதைத் தொடர்ந்து அவர் மனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது கணவரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த் (Vijayakanth) ஏற்கனவே செப்டம்பர் 22 ஆம் தேதி கொரோனாவுக்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டதை அடுத்து, நந்தம்பாக்கத்தில் உள்ள மியோட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


22.9.2020 அன்று விஜயகாந்தின் COVID-19 சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்ததாக MIOT இன்டர்நேஷனல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.


ALSO READ: DMDK தலைவர் விஜயகாந்திற்கு COVID-19; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி


"அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார். சென்னை MIOT மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை உள்ளது” என்று மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிருத்வி மோகன்தாஸ் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக விஜயகாந்தின் தே.மு.தி.க (DMDK) கட்சியும் உள்ளது.


தொடர்ந்து பல அரசியல் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதைப் பார்த்து வருகிறோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் என கட்சி பாகுபாடின்றி கொரோனா அனைவரையும் தன் பிடியில் சிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.


ALSO READ: ‘விரைவில் குணமடைந்து வா நண்பா’ – விஜயகாந்துக்கு ராதாரவி செய்தி!!