அரசியல் வேற சினிமா வேற விஜய் - பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த எச்சரிக்கை
விஜயகாந்த் போல் வரலாம் என நினைத்து விஜய் அரசியலுக்கு வந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் முக்கிய ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும், அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக சார்பாக அனைத்து மாவட்ட செயலாளருக்கும் டிஜிட்டல் கார்டு வழங்கப்பட உள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் நலமாக உள்ளார். தேமுதிக பொருத்தவரை இதுவரை யாரிடமும் கூட்டணி இல்லை என்று முடிவு செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை. அதனால் எங்களை எப்படி அழைப்பார்கள். நிச்சயமாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். திமுக அதிமுக சார்பாக எம்பிகளாக ஜெயித்தவர்கள் இதுவரை தமிழ் நாட்டுக்காக என்ன செய்தார்கள்.
மேலும் படிக்க | வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் லஞ்சம், சாராயம் போதை என்று தலைவிரித்து ஆடுகிறது. ஆட்சிகள் தான் மாறுகிறது தவிர மக்களின் மனநிலை மாறவில்லை. செய்தித்தாள்களில் தேமுதிக - திமுக கூட்டணியில் இணைவதாக வந்த தகவல் தவறானது. எல்லா இடங்களிலும் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. கரூர் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.
ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்கப்படும் என்றுதான் வாக்கு கொடுத்து தேர்தலில் ஜெயித்து வந்தார்கள். ஆனால் இப்போது சில தகுதியான பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இதனால் பெண்கள் திமுக மீது கோபத்துடன் இருக்கிறார்கள்" என்றார். விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, அவர் தலைவரிடம் அறிவுரை கேட்பதற்கு ஒன்றுமில்லை. அரசியல் என்பது வேறு சினிமா என்பது வேறு, கேப்டன் அவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக பல வழியில் மக்களுக்கு சேவை செய்து வளர்ந்தவர். அவரைப் போன்று இன்னொருவர் பிறந்து வந்தால் தான் உண்டு. அப்படி அதையும் மீறி வர நினைத்தால் மோசமான விளைவுகள் தான் சந்திப்பார்கள்" என்றார்.
மேலும் படிக்க | கமல் மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பகீர் குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ