சமூக வலைதளத்தில் இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் உள்ளது. இந்த பக்கத்தில் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் பயணம், செயல்பாடுகள் குறித்து பதிவிடப்பட்டு வருகிறது. இந்த டிவிட்டர் பக்கத்தில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பதிவுகள் பதிவிடப்பட்டு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், தற்போது முதல் முறையாக இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் பதிவிடப்பட்டுள்ளது.


அந்த பதிவில், 


ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.


 



 


இவ்வாறு தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.