புதுடெல்லி: பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்னர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என சட்டசபை செயலாளருக்கு கவர்னர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பிப்ரவரி 20-ம் தேதி கவர்னர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை அளித்தார். 


இந்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைப்பார். சட்டசபை நிழக்வுகள் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை செல்ல உள்ளார்.