தமிழகத்தில் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு கண்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹ 3,121-க்கும், சவரன் ₹ 24,968-க்கும் விற்பனை ஆனது. இதனையடுத்து நேற்றைய தினம் கிராம் ஒன்றுக்கு மேலும் ₹ 6 அதிகரித்து ₹ 3,127 ஆனது. அதவாவது சவரனுக்கு ₹ 25,016 ஆக உயர்ந்து புதிய சரித்திரம் படைத்தது. 


தங்கம் விலை ₹ 25000 கடப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ஆம் நாள் ஒரு கிராம் தங்கம் ₹ 2,922-க்கும், சவரன் ₹ 23,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ₹ 1,640 விலை அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று (29.01.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


தங்கம் (22 கேரட்)..........| 1 கிராம் - ₹ 3,129 | 8 கிராம் - ₹ 25,032
தங்கம் (24 கேரட்)..........| 1 கிராம் - ₹ 3,345 | 8 கிராம் - ₹ 26,760
வெள்ளி..............................| 1 கிராம் - ₹ 41.30 | 1 கிலோ - ₹ 41,300