இந்தோனேசியாவில் சிக்கியுள்ள 430 தமிழ் குடும்பங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியாவில் இருந்து தமிழகத்துக்குத் திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியா தமிழ் சங்கத்தினர் திமுக தலைவர் ஸ்டாலினுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், தற்போது இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாகப் பரவிக் கொண்டுள்ளது. தமிழ் மக்க ஏறக்குறைய 400 குடும்பங்கள் தலைநகர் ஜகார்த்தாவிலும், ஏறக்குறையா 30 தமிழ் குடும்பங்கள் பாண்டுங் நகரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைத்து தமிழ் மக்களும் கொரோனா பாதிப்பால் இருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு நம் தாயகம் தமிழ்நாட்டிற்குத் திரும்ப வர விரும்புகிறார்கள். 



ஆனால், தற்சமயம் விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் தமிழ் குடும்பங்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வரமுடியாமல் தவிக்கிறார்கள். எனவே, தாங்கள் தயைகூர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மற்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடமும் பரிந்துரைத்து இங்கே உள்ள தமிழ் குடும்பங்கள் நாடு திரும்ப விமான போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையடுத்து, அந்த கடிதத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்தோனேசியாவில் 430 தமிழ் குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். அவர்கள் தமிழகத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள். எனவே, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்தோனேசியாவில் உள்ள 430 தமிழ் குடும்பங்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.