பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
மதுரையில் வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.
சென்னை: மதுரையில் ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதாவது மதுரையில் வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகக் கூறினார்.
தமிழர்களின் தைத் திருநாள் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க மதுரை வரவுள்ளார். அவரின் வருகையொட்டி, தமிழக பாஜக சார்பில் "மோடி பொங்கல்" என பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தவும், அதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது 12 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ALSO READ | பிரதமர் மோடியின் மதுரை வருகை பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து.
முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "மோடி பொங்கல்" விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய மாநில பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி முதல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் கட்சி மண்டல அளவில் சிறப்பு பொங்கல் கொண்டாட்டங்களை நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது. பாஜக ஏற்பாடு செய்துள்ள இந்த கொண்டாட்டம் ஜனவரி 12ம் தேதி மதுரையில் நிறைவடைய உள்ளது. மதுரையில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR