நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு எனவும் தமிழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநா் அத்துமீறி செயல்படுகிறார் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி, கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று  கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி நாட்டிற்கு சாபக்கேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபக்கேடு. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார். மாவட்டம் தோறும் கலெக்டர்களை அழைத்து கொண்டு அவர் புரோக்கர் போல செயல்படுகிறார்.
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?. இதனை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். இதில் நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை செல்ல போலீசார் அனுமதி மறுத்தால் ஜல்லிக்கட்டு போல் மிகப்பெரிய போராட்டமாக மாறும்" என்றார்.