கடந்த செப்டம்பர் 4-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள்வெளியிட வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணத்தால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணத்தில் இல்லை. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழக தேர்தல் கமிஷன் சார்பில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 


உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் உள்ளது. 1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட வார்டு வரையறை படி தேர்தல் நடத்த வேண்டுமா என்பதில் குழப்பம் உள்ளது. 


உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு ஐகோர்ட் விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழக தேர்தல் கமிஷன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 


உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை இன்றைக்குள் வெளியிடாவிட்டால் தமிழக தேர்தல் கமிஷன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என ஐகோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.