அதிமுகவில் பிரச்சனை; எங்களுக்கு சம்பந்தம் இல்லை - தமிழிசை
தமிழகத்தில் அதிமுகவை முடக்கி பாஜக வர வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என தமிழிசை பந்தயம் கட்டியுள்ளதாக அம்மா அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்
மேலும் தமிழகம் காலம் காலமாக தனித் தீவாக இருந்து வருகிறது. இது பெரியாரின் கோவில், அண்ணாவின் நந்தவனம், எம்ஜிஆரின் தோட்டம், ஜெயலலிதாவின் கோட்டை. இங்கு வகுப்புவாத சக்திகள் தலை தூக்க முடியாது. இங்கு நடப்பது ஒரு கலாச்சார யுத்தம். இந்த யுத்தத்தில் டிடிவி தினகரன் தலைமை தாங்கிய அணியே வெற்றி பெறும் எனவும் கூறினார்.
இதைக்குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
அதிமுகவை முடக்கி எங்களது கட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் நினைத்ததில்லை. நாங்கள் தனியாகவே தமிழகத்தில் வளர்வோம் என்று கூறினார்
மேலும், அதிமுகவில் உள்ளவவர்கள் அவர்களாகவே இணைகிறார்கள். அவர்களாகவே பிரிகிறார்கள். என்னப் பிரச்சனையாக இருந்தாலும் சீக்கிரம் முடிச்சிட்டு மக்களை பற்றி சிந்தித்து அவர்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அதிமுகவினருக்கு அட்வைஸ் செய்தார் தமிழிசை.
தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அதிமுக கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது. பாஜகவிற்கும் இந்தப் பிரச்சனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் பின்வாசல், பின்புலம், ரகசிய பரிமாற்றம் எதுவும் எங்களுக்குள் கிடையாது.
தமிழகத்தில் நேரடியாக அரசியல் செய்யவே நாங்கள் நினைக்கிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.